சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஐகோர்ட்டு வக்கீல்கள் ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம்


சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஐகோர்ட்டு வக்கீல்கள் ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 18 March 2017 2:25 AM IST (Updated: 18 March 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆணையத்தின் உறுப்பினர்களான வக்கீல்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.

காஞ்சீபுரம்,

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்த பணிகளை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆணைய உறுப்பினர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் பல்லாவரம் நகராட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆணையத்தின் உறுப்பினர்களான வக்கீல்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பொன்னையா கூறுகையில் ‘ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுப்பணியை பொதுமக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரையும் பயன்படுத்தி விரைந்து முடித்து பசுமை மாவட்டமாக மாற்ற அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யும்’ என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு வனசரகர் எம்.உமாதேவி, வக்கீல்கள் ஆணைய உறுப்பினர்கள் ராஜா, ஜெயக்குமார், ஜெயப்பிரகாஷ், கணேஷ்குமார், ஜோதிவாணி, சுஜித் பாலாண்டே, மாவட்ட வருவாய் அதிகாரி க.சவுரிராஜன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Next Story