கஞ்சா விற்பனை வழக்கில் சிக்கிய சிறுவன் சமூக சேவையில் சிறார் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு
கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சிக்கிய சிறுவன், 2 வாரம் சமூக சேவையில் ஈடுபட சிறார் கோர்ட்டு நீதிபதி புதுமையான தீர்ப்பினை பிறப்பித்துள்ளார்.
சென்னை,
கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சிக்கிய சிறுவன், அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரியில் 2 வாரம் சமூக சேவையில் ஈடுபடவேண்டும் என்று சிறார் கோர்ட்டு நீதிபதி லட்சுமி ரமேஷ் புதுமையான தீர்ப்பினை பிறப்பித்துள்ளார்.
புதுமையான நிபந்தனை
பெண்ணிடம் தகராறு செய்த வழக்கில் ராஜேந்திரன் என்பவருக்கு முன்ஜாமீன் வழங்கிய அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கே.ரகுமான், புதுமையான நிபந்தனைகளை விதித்து, முன்ஜாமீன் வழங்கினார். அதாவது, மனுதாரர் ராஜேந்திரன், அவர் வசிக்கும் கிராமத்தில், 20 நாட்களுக்குள் 100 சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று நீதிபதி ரகுமான் உத்தரவிட்டார்.
இதேபோல, மான் வேட்டையில் சிக்கிய செல்வராஜ் என்ற கூலித் தொழிலாளிக்கு ஜாமீன் வழங்கிய மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட்டு சுரேஷ்குமார், ‘மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விலங்குகளுக்காக கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியை ஒரு மாதத்துக்கு செல்வராஜ் தண்ணீர் நிரப்பவேண்டும்’ என்று புதுமையான நிபந்தனையை விதித்தார்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை சிறார் நீதிமன்ற நீதிபதி லட்சுமி ரமேசும், ஒரு புதுமையான தீர்ப்பினை நேற்று வழங்கியுள்ளார்.
சமூக சேவை
கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சிக்கிய ஒரு சிறுவனுக்கு, நல்வழிப்படுத்தும் தண்டனையை நேற்று அவர் வழங்கியுள்ளார். நீதிபதி லட்சுமி ரமேஷ் பிறப்பித்த தீர்ப்பில், ‘கஞ்சாவினால் உடலுக்கு எவ்வளவு பெரியகேடு ஏற்படுகிறது? இந்த கஞ்சா புகைக்கும் பழக்கத்தினால் சமுதாயத்தில் எத்தனை பேர் தன்னுடைய வாழ்க்கையை தொலைத்துள்ளனர்? ஆரோக்கியமான வாழ்க்கை என்றால் என்ன? என்பதை இந்த சிறுவன் புரிந்துக்கொள்ள வேண்டும்.
அதற்காக அவன் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் ஆஸ்பத்திரியில் 2 வாரத்துக்கு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சமூக சேவையில் ஈடுபடவேண்டும். இதை குழந்தைகள் நல பிரிவு போலீஸ் அதிகாரி கண்காணிக்கவேண்டும். இந்த சிறுவன் சமூக சேவையை செய்தானா? என்பதை அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரி நிர்வாகம், உறுதி செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Next Story