பாறைகள் உருண்டு விழுந்த பகுதியில் புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு


பாறைகள் உருண்டு விழுந்த பகுதியில் புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 18 March 2017 4:00 AM IST (Updated: 18 March 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

பாறைகள் உருண்டு விழுந்த பள்ளிவாசல் பகுதியில் புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மூணாறு

இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த பள்ளிவாசல் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் சுமார் 200 அடி உயரத்தில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் விடுதி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் சேதமடைந்தன. இதையடுத்து அந்த தங்கும் விடுதியை மூடவும், அப்பகுதியில் உள்ளவர்களை வேறு இடத்துக்கு மாற்றவும் மாவட்ட கலெக்டர் கோகுல் உத்தரவிட்டார்.

மேலும் அப்பகுதியில் உள்ள மலைகளில் இருக்கும் பாறைகள் மீண்டும் உருண்டு விழும் வாய்ப்பு உள்ளதா? என ஆய்வு செய்ய புவியியல் ஆய்வுத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து புவியியல் துறை துணை இயக்குனர் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் பள்ளிவாசல் பகுதிக்கு வந்தனர்.

ஆய்வு

பின்னர் அங்குள்ள மலைப்பகுதிகளுக்கு சென்று பாறைகள் உருண்டு விழும் வாய்ப்பு உள்ளதா? பாறைகள் இருக்கும் இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர். இது குறித்து புவியியல் துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளிவாசல் மலைப்பகுதியில் உள்ள மண், பாறை துண்டுகள் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் பாறைகள் உருண்டு விழும் வாய்ப்பு உள்ளதாக கருதுகிறோம். இதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட உள்ளனர். அவர்கள் 10 நாட்களுக்குள் இங்கு வந்துவிடுவார்கள். அதன் பின்னர் அனைத்து இடங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றனர்.


Next Story