பா.ஜனதாவின் போர் வீரன் நான் ‘கட்சி என்ன சொன்னாலும் கட்டுப்பட்டு நடப்பேன்’ மத்திய மந்திரி பதவி குறித்து தேவேந்திர பட்னாவிஸ் பதில்


பா.ஜனதாவின் போர் வீரன் நான் ‘கட்சி என்ன சொன்னாலும் கட்டுப்பட்டு நடப்பேன்’ மத்திய மந்திரி பதவி குறித்து தேவேந்திர பட்னாவிஸ் பதில்
x
தினத்தந்தி 18 March 2017 4:00 AM IST (Updated: 18 March 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

‘பா.ஜனதாவின் போர் வீரன் நான், கட்சி என்ன சொன்னாலும் கட்டுப்பட்டு நடப்பேன்’ என மத்திய மந்திரி பதவியை ஏற்பது குறித்து தேவேந்திர பட்னாவிஸ் பதில் அளித்துள்ளார்.

மும்பை,

‘பா.ஜனதாவின் போர் வீரன் நான், கட்சி என்ன சொன்னாலும் கட்டுப்பட்டு நடப்பேன்’ என மத்திய மந்திரி பதவியை ஏற்பது குறித்து தேவேந்திர பட்னாவிஸ் பதில் அளித்துள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ் பதில்

இந்தியா டுடே மாநாடு மும்பை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. இந்த விழாவில் முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார். அப்போது மத்திய மந்திரி பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:–

மத்திய மந்திரியை விட மாநிலத்தின் முதல்– மந்திரிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. தற்போது நான் முதல்– மந்திரியாக இருக்கிறேன். என் முன் மிகப்பெரிய திட்டம் உள்ளது. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் மராட்டியத்தை மாற்றிக்காட்டுவேன். ஆனால் ‘நான் பா.ஜனதாவின் உண்மையான போர் வீரன். கட்சி என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்பட்டு நடப்பேன்’.

ஜி.எஸ்.டி.யால் மாநில அரசுக்கு பலன்

அரசியலை பற்றி பேசும்போது நாம் ஜனநாயகம் பற்றியும் பேசவேண்டும். ஒரு கட்சியால் மற்றொரு கட்சியை அழிக்க முடியாது. மக்கள் தான் தங்களுக்காக அது போன்ற முடிவுகளை எடுக்கிறார்கள். பிரதமர் மோடி மிகப்பெரிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளார். பிற கட்சிகள் அந்த இலக்கை முறியடிக்க வேண்டும். அல்லது அதை விட பெரிய இலக்கை நிர்ணயம் செய்யவேண்டும்.

ஜி.எஸ்.டி. மூலம் அனைத்து மாநிலங்களும் பயனடையும். அந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியடையும். அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே அதை எதிர்க்கின்றனர். வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை. ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி. அமலுக்கு வரும். போட்டி நிறைந்த கூட்டாட்சி தத்துவத்தில் நாம் யாருக்கும் பயனில்லாமல் பல திட்டங்களுக்கு தடைகளை உருவாக்குகிறோம். ஜி.எஸ்.டி.யால் பொது சந்தை உருவாகும். இதனால் மாநில அரசு நேரடியாக பலனடையும்.

இவ்வாறு முதல்–மந்திரி பேசினார்.


Next Story