சம்பளம் வழங்கக்கோரி சட்டசபை நோக்கி பாப்ஸ்கோ ஊழியர்கள் ஊர்வலம்
13 மாதகால சம்பளம் வழங்கக்கோரி சட்டசபை நோக்கி பாப்ஸ்கோ ஊழியர்கள் ஊர்வலம்
புதுச்சேரி
புதுவை அரசு நிறுவனமான பாப்ஸ்கோவில் 515 பல்நோக்கு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 13 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த சம்பளத்தை வழங்கக்கோரி கடந்த 8–ந்தேதி முதல் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலாண் இயக்குனர, சிறைபிடிப்பு, கஞ்சி காய்ச்சும் போராட்டம் என போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் நேற்று காலை அவர்கள் தட்டாஞ்சாவடியில் உள்ள பாப்ஸ்கோ தலைமை அலுவலகம் முன்பு கூடினார்கள். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் காமராஜ் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலை அருகே வந்தது. அங்கு அவர்களை பெரியகடை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இறுதியில் ஊழியர்கள் சிலர் சட்டசபைக்கு வந்து முதல்–அமைச்சர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.