கார்பனை கிரகிக்கும் தன்மை குறையும் மரங்கள்


கார்பனை கிரகிக்கும் தன்மை குறையும் மரங்கள்
x
தினத்தந்தி 18 March 2017 7:30 PM IST (Updated: 18 March 2017 11:38 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவில் பல மரங்களால் முன்பைப் போல கார்பனை சேமித்து வைக்க முடியவில்லை என்பதைக் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை மரங்கள் எந்த அளவுக்குச் சரிப்படுத்தும் என்பது குறித்து தங்கள் ஆய்வு சந்தேகங்களை எழுப்பி இருப்பதாக, மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சிட்னியின் எல்லைப்பகுதியில், வரும் 2050-ம் ஆண்டு நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் அளவிலான கார்பன்-டை-ஆக்சைடை யூகலிப்டஸ் மரங்கள் மீது வீசச் செய்து அதன் தாக்கத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
மண்ணின் மோசமான தரம், மரங்களின் வாயுக்களை கிரகிக்கும் தன்மையைப் பாதிக்கிறது என இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதேசமயம், காடுகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கார்பனின் அளவு குறித்த சர்வதேச மதிப்பீடுகள் மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story