எரிமலைகள் ஒரே நேரத்தில் வெடிக்கும்?


எரிமலைகள் ஒரே நேரத்தில் வெடிக்கும்?
x
தினத்தந்தி 18 March 2017 2:00 PM GMT (Updated: 18 March 2017 6:19 AM GMT)

தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலையால் உலகம் முழுவதும் உள்ள எரிமலைகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறக்கூடும் என்று இத்தாலி ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

‘எட்னா’ எரிமலை வெடித்துச் சிதறிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஐஸ்லாந்தில் 4 எரிமலைகளும், இந்தியாவில் பல்லாண்டுகளாக அமைதியாக உள்ள எரிமலைகளும் வெடித்துச் சிதறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றம்தான் இந்த நிலைமைக்குக் காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எரிமலைச் சீற்றத்துடன், நிலநடுக்க அபாயமும் உலகம் முழுக்கக் காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இந்த இயற்கைப் பேரழிவுகள் ஒரே நேரத்தில் ஏற்பட்டால், பூமியில் வாழும் மக்களுக்கு பேராபத்து ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பகுதிகள் பூகம்பத்துக்கு உள்ளாகலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஆனால் அதுபோன்ற பேரழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கான மாற்றுவழி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story