தமிழக அரசு சார்பில் பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்


தமிழக அரசு சார்பில் பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்
x
தினத்தந்தி 19 March 2017 4:30 AM IST (Updated: 18 March 2017 6:17 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு சார்பில் பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவியை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.

ராமேசுவரம்,

துப்பாக்கிச்சூடு

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கடந்த 6–ந்தேதி தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ பலியானார். மீனவர் சரோன் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். தமிழக அரசு சார்பில் மீனவர் பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ. 5 லட்சமும், படுகாயம் அடைந்த மீனவர் சரோனுக்கு ரூ. 1 லட்சமும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து அமைச்சர் மணிகண்டன், மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆகியோர் நேற்று தங்கச்சிமடம் அய்யன்தோப்பு பகுதியில் உள்ள பிரிட்ஜோ வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையையும், படுகாயம் அடைந்த சரோனுக்கு ரூ.1 லட்சத்துக்காக காசோலையையும் வழங்கினார். இதுதவிர அமைச்சர் மணிகண்டன், பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.

நலத்திட்டங்கள்

அப்போது அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:– இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள 138 படகுகளை விடுவிக்க தமிழக அரசு முழுமுயற்சி எடுத்துவருகிறது. மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து விரைவில் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அவை அனைத்தும் விரைவில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி, முத்தையா எம்.எல்.ஏ., துணை தாசில்தார் அப்துல்ஜபார், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் கே.கே.அர்ச்சுனன், மாவட்ட விவசாய அணி செயலாளர் வீரபத்ரன், மீனவ சங்க பிரதிநிதிகள் போஸ், தேவதாஸ், சேசுராஜா, சகாயம் உள்பட அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.


Next Story