ஓய்வூதிய பட்டுவாடா கோரி போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு தொழிலாளர்கள் மறியல் பஸ்கள் தாமதமாக இயக்கப்பட்டன
பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வூதிய பட்டுவாடா கோரி நேற்று அதிகாலை
விருதுநகர்,
அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் முறையாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஓய்வூதியம் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. குறிப்பிட்ட தேதியில் வழங்கப்படாததால் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்துகழகம் தரப்பில் 2 மாதங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் நிலைமை சீரடையவில்லை.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாலை 5 மணியளவில் போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு மறியல் போராட்டம் நடத்த பணி ஓய்வு பெற்ற நலச்சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி விருதுநகர் மண்டலத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு அதிகாலை 5 மணியளவில் மறியல் போராட்டம் நடந்தது.
தாமதம்இதனால் பணிமனைகளில் இருந்து அதிகாலை புறப்பட வேண்டிய பஸ்கள் போராட்டம் முடிந்த பின்பு ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இந்த போராட்டத்தினால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.