காயம்பட்டு கிராமத்தில் அம்மா திட்ட முகாம்


காயம்பட்டு கிராமத்தில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 19 March 2017 2:00 AM IST (Updated: 18 March 2017 7:49 PM IST)
t-max-icont-min-icon

செங்கத்தை அடுத்த காயம்பட்டு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

செங்கம்,

செங்கத்தை அடுத்த காயம்பட்டு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. சமூக பாதுகாப்பு தாசில்தார் ரேணுகா, மண்டல துணை தாசில்தார் மலர்கொடி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பொதுமக்களிடம் இருந்து 86 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில் 53 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. தீர்வு காணப்பட்ட 53 மனுக்களின் பயனாளிகளுக்கு செங்கம் தாசில்தார் உதயகுமார் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

முகாமில் வருவாய் ஆய்வாளர் துரைராஜ், தனி வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் தண்டபாணி நன்றி கூறினார்.


Next Story