நாமக்கல்லில் பா.ஜனதாவினர் இருசக்கர வாகன ஊர்வலம்
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநில தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை கொண்டாடும்
நாமக்கல்,
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநில தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நேற்று நாடு முழுவதும் பா.ஜனதாவினர் மாவட்ட தலைநகரங்களில் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் நடந்த ஊர்வலத்தை மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் கோட்டை சாலை, சேலம் சாலை, கடைவீதி, பஸ்நிலையம் வழியாக திருச்சி சாலையில் உள்ள பா.ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
இதில் பா.ஜனதா இளைஞர் அணி மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன் மற்றும் இளைஞர் அணியினர் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.
Next Story