நாமக்கல்லில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பென்சன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
நாமக்கல்,
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பென்சன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு போக்குவரத்து பணியாளர்கள் சம்மேளன மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. சார்பில் மாவட்ட தலைவர் சிங்காரம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கிளை செயலாளர் முருகேசன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சண்முகம் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Next Story