ஹெல்மெட்டை உடலின் ஒரு உறுப்பாக நினைக்க வேண்டும் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேச்சு

நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் சாலை பாதுகாப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது. கருத்தரங்குக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேசியபோது குமரி மாவட்டத்தில் ஒரு மாதத்தில் சுமார் 25 முதல் 30 இருசக்கர வாகன விபத்துக்கள் நடக்கின்றன. விபத்துக்களின்போது ஹெல்மெட் அணியாதவர்கள் உயிரிழக்கிறார்கள். ஹெல்மெட்டை நம் உடலின் ஒரு உறுப்பாக நினைக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் 93 சதவீதம் படித்தவர்கள் உள்ளார்கள். வாகனங்கள் ஓட்டும்போது கைபேசியை பயன்படுத்த கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்றார்.
இதில், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரஜினிகாந்த், முருகன், பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் பேராசிரியர் அருள் சன் டேனியல் மற்றும் மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story