அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கைது


அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கைது
x
தினத்தந்தி 19 March 2017 2:30 AM IST (Updated: 19 March 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

மறியல் போராட்டம்

அரசு போக்குவரத்து கழகத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கூறி நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் அலுவலகம் முன்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினர்.

2 நாட்களாக இரவு, பகல் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்டம் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் மற்றும் வாரிசுதாரர் நல அமைப்பு சார்பில் நேற்றும் போராட்டம் நடந்தது.

161 பேர் கைது

நேற்று அதிகாலை 3 இடங்களில் போராட்டம் நடந்தது. வண்ணார்பேட்டை பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொ.மு.ச. தர்மன், ஏ.ஐ.டி.யு.சி. ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் பணிமனையில் இருந்து வெளியே போக்குவரத்துக்கு அனுப்பப்பட்ட பஸ்களை வழிமறித்து போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 76 பேரை கைது செய்தனர்.

இதேபோல் வண்ணார்பேட்டை புறவழிச்சாலை பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேரையும், கே.டி.சி. நகர் பணிமனை முன்பு மறியல் செய்த 47 பேரையும் போலீசார் கைது செய்தனர். நெல்லை மாநகரில் மட்டும் 3 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 161 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாபநாசம்–கூனியூர்

பாபநாசம் பணிமனை முன்பு நேற்று காலை ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் பஸ் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் தி.மு.க. சார்பில் மைக்கேல், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் சங்க செயலாளர் மதிவாணன், தலைவர் செல்வராஜ், பொருளாளர் சோமசுந்தரம், அ.தி.மு.க. சார்பில் செல்வராஜ், செல்லையா, பேச்சிமுத்து மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story