திருத்தணி உரக்கடையில் வருமானவரி அதிகாரிகள் சோதனை


திருத்தணி உரக்கடையில் வருமானவரி அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 19 March 2017 1:36 AM IST (Updated: 19 March 2017 1:35 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி உரக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் திடீரென சோதனை நடத்தினார்கள்.

திருத்தணி,

திருத்தணி ம.பொ.சி சாலையில் புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான உரக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் திடீரென சோதனை நடத்தினார்கள்.

மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொண்ட சமயத்தில் புருஷோத்தமன் மற்றும் அவரது நண்பர் வெங்கடேசன் ஆகியோர் வங்கியில் லட்சக்கணக்கான ரூபாய் டெபாசிட் செய்ததால் இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதியம் 1 மணி முதல் இரவு 12 மணி வரை நடந்த இந்த சோதனையில் வங்கியில் லட்சக்கணக்கில் டெபாசிட் செய்ய பணம் வந்தது எப்படி? அதற்குரிய உரிய ஆவணங்கள் எங்கே? என்பது குறித்து புருஷோத்தமன் மற்றும் வெங்கடேசன் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

பின்பு அங்கு இருந்த ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றனர். சோதனையின்போது கிடைக்கப் பெற்ற ஆவணங்கள் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story