கல்குவாரி குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு
திருச்சி அருகே கல்குவாரி குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சோமரசம்பேட்டை,
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் சித்தாநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கரிச்சாம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி வசந்தா. இவர்களுடைய மகன் மதன்குமார் (வயது 13). இவர் பில்லூர் உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வசந்தாவின் அக்காள் ஆனந்தவள்ளி-செல்வம் தம்பதியின் மகன் ஜெகன்(16). இவர் மணப்பாறையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
அதே பகுதியில் வசிக்கும் அவர்களுடைய உறவினர்களின் மகன்கள் தீனா(11), அன்பு(11). இவர்களும் பில்லூர் பள்ளியில் படித்து வருகின்றனர்.
குளத்தில் மூழ்கி சாவு
நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் அவர்கள் 4 பேரும் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளிவாடியில் கல்குவாரி குளம் அருகே உள்ள பகுதியில் எலி வேட்டையாட சென்றுள்ளனர். வேட்டையாடியதில் எலி எதுவும் கிடைக்காததால் அருகில் உள்ள குளத்தில் முகத்தை கழுவ சென்றனர். முதலில் மதன்குமார் குளத்தில் இறங்கியபோது கால் வழுக்கி குளத்தில் விழுந்துள்ளார்.
நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்த அவரை காப்பாற்ற ஜெகன் குளத்தில் குதித்துள்ளார். ஆனால் அவருக்கும் நீச்சல் தெரியாததால், இருவரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
போலீசார் விசாரணை
இதனால் அதிர்ச்சியடைந்த தீனாவும், அன்பும் சத்தம் போட்டு அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் குளத்தில் அதிக அளவு தண்ணீர் இருந்த காரணத்தால் அருகில் உள்ளவர்கள் வந்தும் மாணவர்கள் இருவரையும் மீட்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள், குளத்தில் இறங்கி 2 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இனாம்குளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது இஸ்திரீஸ் மற்றும் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன், ஸ்ரீரங்கம் தாசில்தார் ராஜசேகர பாண்டியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தகனம்
இந்நிலையில் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்கள் எந்த தாமதமும் இல்லாமல் 2 மாணவர்களின் உடலையும் உடனடியாக பிரேதப் பரிசோதனை செய்துபெற்றோரிடம் ஒப்படைத்தனர். நேற்று இரவு 8 மணிக்கு மாணவர்களின் உடல் கரிச்சாம்பட்டி அருகே தகனம் செய்யப்பட்டது. குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story