100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம்


100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 19 March 2017 4:15 AM IST (Updated: 19 March 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

விராலிமலை,

விராலிமலை ஊராட்சி, மேப்பூதகுடி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் சுமார் 220 பேர் வேலை பார்க்கின்றனர். இவர்கள் மேப்பூதகுடி கிராமத்திற்குட்பட்ட கொசவன் ஊரணியில் சில நாட்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று அனைவரும் வேலைக்காக கொசவன் ஊரணிக்கு வந்தனர். தினமும் பணித்தள பொறுப்பாளர் இவர்களிடம் கையெழுத்து வாங்கிய பின்னர், அவர்கள் வேலை செய்யும் இடத்தை அளந்து கொடுப்பார். ஆனால் நேற்று காலை 11 மணிக்கு மேலாகியும் பணித்தள பொறுப்பாளரோ அல்லது ஊராட்சி செயலாளரோ வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் அனைவரும் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், அவர்களிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story