வடகாட்டில் கால்நடைகள், பாத்திரங்களுடன் அகதிகளாக குடியேறும் போராட்டம்
இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகாட்டில் கிராம மக்கள் கால்நடைகள், பாத்திரங்களுடன் வந்து அகதிகளாக குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாண்டார்கொல்லையில் நடந்த போராட்டத்தில் பொதுமக்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
வடகாடு,
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி பொதுமக்கள் தொடங்கிய போராட்டம் கடந்த 9-ந் தேதி வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரியும் வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.
அகதிகளாக குடியேறும்...
வடகாடு பெரியகடைவீதியில் 14-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் வீடுகளில் இருந்து ஆடு, மாடுகளுடனும், பாய், தலையணை மற்றும் பாத்திரங்களை எடுத்துக்கொண்டும் ஊர் எல்லையில் இருந்து ஊர்வலமாக பெரியகடைவீதிக்கு வந்து, அகதிகளாக குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கொண்டு வந்த பொருட்களை போராட்ட பந்தலில் வைத்து, இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என்றும், வடகாடு, வானக்கண்காடு, கோட்டைக்காடு, கருக்காகுறிச்சி, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து எண்ணெய், எரிவாயு வளங்களை எடுக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பியும், ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிச்சை எடுத்து போராட்டம்
இதேபோல், நல்லாண்டார்கொல்லையில் 31-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒப்பாரி வைத்தனர். பின்னர் நல்லாண்டார்கொல்லையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு அருகே கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம் நடத்தி, இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் பல கிராமங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

Next Story