பாரதீய ஜனதா கட்சியினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

பெரம்பலூர்,
உத்தரபிரதேசம், உத்ரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்ததை கொண்டாடும் வகையில் பெரம்பலூரில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது. இந்த ஊர்வலம் புறநகர் பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலைகள் மற்றும் வீதிகள் வழியாக சென்று மீண்டும் புறநகர்பஸ்நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தின் நடுவே பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சாமி.இளங்கோவன், பொதுச்செயலாளர்கள் பாஸ்கர், அடைக்கலராஜ், பொருளாளர் சுபிக்ஷா சாமிநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வேலுசாமி, மாவட்ட செயலாளர் குரு.ராஜேஷ், மண்டல தலைவர்கள் கலைச்செல்வன், அழகுவேல், நகர தலைவர் கமல்முத்துகுமார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story