பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு சொந்தமான மின் கம்பிகள் திருடிய 3 பேர் கைது


பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு சொந்தமான மின் கம்பிகள் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 March 2017 2:18 AM IST (Updated: 19 March 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு சொந்தமான மின் கம்பிகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்காடு,

நாகை மாவட்டம், பூம்புகாரில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின்கம்பிகள், இரும்பு மின்கம்பங்கள் உள்ளிட்டவை அடிக்கடி மர்மநபர் களால் திருடப்படுவதாக கும்பகோணம் கோட்ட பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் கும்பகோணம் கோட்ட அதிகாரிகள், பூம்புகாரில் உள்ள ஒரு பழைய இரும்பு விற்பனை செய்யும் கடைக்கு நேரில் சென்று சோதனையிட்டனர். அங்கு பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு சொந்தமான மின்கம்பிகள், மின்கம்பங்கள், மின்விளக்குகள் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் என்று கூறப் படுகிறது. பின்னர் அதிகாரிகள், அந்த கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பூம்புகார் அருகே பழையகரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 38), திருவெண்காடு பகுதியை சேர்ந்த மருதவாணன் (50), லோகநாதன் (41) ஆகியோர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு சொந்தமான தளவாட பொருட்களை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். அலுவலர் விவேகானந்தன் பூம்புகார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், மருதவாணன், லோகநாதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

Next Story