கல்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை திறந்து 4 பவுன் நகை திருட்டு


கல்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை திறந்து 4 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 19 March 2017 2:30 AM IST (Updated: 19 March 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை திறந்து 4 பவுன் நகை திருடப்பட்டது.

கல்பாக்கம்,

கல்பாக்கத்தை அடுத்த பவுஞ்சூர் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 41). விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் அருகே வைத்து விட்டு மனைவியுடன் வயல் வேலைக்கு சென்றார். மதியம் சாப்பிடுவதற்காக இருவரும்  வீட்டுக்கு வந்தனர். அப்போது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் 23 வயது மதிக்கத்தக்க 2 பேர் பீரோவை திறந்து வைத்து கொண்டு அதன் அருகே நின்று கொண்டிருந்தனர்.

 வெங்கடேசன் அவர்களை  பிடிக்க முயன்றார். அப்போது அவர்கள் இருவரும் வெங்கடேசனை கீழே தள்ளி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

திருட்டு

பீரோவில் இருந்த 4 பவுன் மதிப்பிலான 2 மோதிரங்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வெங்கடேசன் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Next Story