ஆலந்தூரில் ஆதார் அட்டை எடுக்கும் பணி பாதிப்பு


ஆலந்தூரில் ஆதார் அட்டை எடுக்கும் பணி பாதிப்பு
x
தினத்தந்தி 19 March 2017 2:33 AM IST (Updated: 19 March 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

நந்தம்பாக்கம், மணப்பாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எடுக்கும் சிறப்பு முகாம் ஆலந்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நேற்று நடந்தது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம், மணப்பாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எடுக்கும் சிறப்பு முகாம் ஆலந்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு அ.தி.மு.க தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆதார் அட்டை எடுக்கும் பணிக்கு தாசில்தார் தடைவிதித்ததாக தெரிகிறது. இதனால் ஆதார் அட்டை எடுக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் குழந்தைகளுடன் வந்தவர்கள் கடும் அவதியடைந்தனர்.

பின்பு இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் அதிகாரிகள் பேசிய பின் 2 மணி நேர தாமதத்திற்கு பின் ஆதார் எடுக்கும் பணி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் மீண்டும் தொடங்கியது. 

Next Story