பட்ஜெட் நகலை எரித்து ஆர்ப்பாட்டம் ‘எதிர்க்கட்சியினர் ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தியது வெட்கக்கேடானது’ தேவேந்திர பட்னாவிஸ் வேதனை


பட்ஜெட் நகலை எரித்து ஆர்ப்பாட்டம் ‘எதிர்க்கட்சியினர் ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தியது வெட்கக்கேடானது’ தேவேந்திர பட்னாவிஸ் வேதனை
x
தினத்தந்தி 19 March 2017 4:00 AM IST (Updated: 19 March 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

‘‘பட்ஜெட் நகலை எரித்து எதிர்க்கட்சியினர் ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தியது வெட்கக்கேடானது’’ என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மும்பை,

‘‘பட்ஜெட் நகலை எரித்து எதிர்க்கட்சியினர் ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தியது வெட்கக்கேடானது’’ என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

பட்ஜெட் நகல் எரிப்பு

மராட்டிய அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்யாததை கண்டித்து நேற்று சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சியினர் பட்ஜெட் நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–

பட்ஜெட் உரையின் போது எதிர்க்கட்சியினர் நடந்து கொண்ட விதம், ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தி விட்டது. விவசாயிகளுக்கு நீதி கேட்கிறோம் என்ற பெயரில் சட்டசபையில் வெளிப்படையாக கேலிக்கூத்துகளை அரங்கேற்றி எள்ளி நகையாடிவிட்டனர். அவர்களது செயலுக்காக நான் வெட்கப்படுகிறேன். எதிர்க்கட்சியினர் பூங்கா ஒன்றுக்கு விளையாட வந்தது போல் தெரிகிறது. மேலும், பட்ஜெட் நகலை எரித்து மிகவும் வெறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டுவிட்டனர்.

சுமையை தாங்க தயார்

உத்தவ் தாக்கரேயுடன் தனிப்பட்ட முறையில் நான் பேசியிருக்கிறேன். விவசாயிகளின் காரணங்களுக்காக நாங்கள் ஒருமித்து பாடுபடுவோம். மத்திய அரசும் விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். மத்திய அரசு ஒரு முடிவை எடுத்ததும், விவசாயிகளை கடனில் இருந்து விடுவிக்க தேவையான சுமையை தாங்க மாநில அரசு தயாராக இருக்கிறது. பட்ஜெட்டில் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் நீதி வழங்கப்பட்டிருக்கிறது.

அதிகப்படியான கழிவறைகள்

கடந்த 20 ஆண்டுகளில் அவர்கள் (காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ்) எத்தனை கழிவறைகள் கட்டினார்களோ அதை விட அதிக எண்ணிக்கையில் கழிவறைகள் நாங்கள் கட்டியிருக்கிறோம். மராட்டியத்தில் அதிகப்படியான முதலீடுகள் செய்யப்பட்டிருக்கிறது. விவசாய கடனுக்காக நாங்கள் ரூ.30 ஆயிரத்து 500 கோடி செலவு செய்தால், மேற்கொண்டு விவசாயத்துறையில் முதலீடு செய்ய நிதி இருக்காது. அதனால் தான் மத்திய அரசை அணுகினோம்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.


Next Story