கொருக்குப்பேட்டையில் தண்ணீர் லாரி மோதி 10 மோட்டார் சைக்கிள்கள் சேதம்


கொருக்குப்பேட்டையில் தண்ணீர் லாரி மோதி 10 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
x
தினத்தந்தி 19 March 2017 4:03 AM IST (Updated: 19 March 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

லாரி தானாக பள்ளமான இடத்தை நோக்கி ஓடி அங்கிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இதில் 10 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.

ராயபுரம்,

சென்னை கொருக்குப்பேட்டை இளைய தெருவில் நேற்று காலை பா.ஜனதா வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், வேட்பாளர் கங்கை அமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு வந்த பலர் தங்களுடைய மோட்டார் சைக்கிள்களை இளைய தெருவில் நிறுத்தியிருந்தனர். அதற்கு அருகில் தண்ணீர் லாரி ஒன்று தொட்டியில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்தது.

அப்போது மேடான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரி தானாக பள்ளமான இடத்தை நோக்கி ஓடி அங்கிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இதில் 10 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. விபத்து ஏற்பட்டதும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கங்கை அமரன் ஆகியோர் உடனடியாக வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story