கே.கே.நகர் பகுதியில் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக பெண்கள் புகார்
சென்னை கே.கே.நகரில் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக பெண்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
சென்னை,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
சென்னை கே.கே.நகரில் குடிநீர் குழாய்களில் தினமும் தண்ணீர் வருவதில்லை. 2 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. அவ்வாறு வரும் தண்ணீரும் துர்நாற்றத்துடன் வருகிறது. இதனை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து கே.கே.நகர் குடிசை மாற்று வாரியத்தைச் சேர்ந்த பெண்கள் ராணி, சாந்தி, கலா ஆகியோர் கூறியதாவது:–
குடிக்க முடியாது
எங்கள் தெருவுக்கு
2 குழாய்களில் குடிநீர் வந்து கொண்டிருந்தது. அந்த தண்ணீரை அடிபம்பு மூலம் அடித்து பிடித்து வந்தோம். இதற்காக அடிபம்பின் மேல் பகுதியை வீடுகளில் வாங்கி வைத்துள்ளோம். ஒவ்வொருவரும் அவர்கள் வீடுகளில் இருந்து அடிபம்பின் மேல் பகுதியை எடுத்து வந்து தண்ணீர் பிடிப்போம். வீட்டுக்கு 15 குடங்கள் தண்ணீர் போதுமானது.
கடந்த 2 மாதங்களாக குழாய்களில் தண்ணீர் அதிக நேரம் வருவது இல்லை. குறைந்த நேரம் தான் வருகிறது. அதுவும் கடந்த 4 நாட்களாக தண்ணீரில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தண்ணீரை குடிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்தவும் முடியவில்லை. கழிவறைக்கு மட்டும் தான் பயன்படுத்துகிறோம். இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. லாரியில் வரும் தண்ணீர் போதுமானதாக இல்லை. அதனை தான் குடிக்கிறோம், குடிநீர் குழாய்களில் போதிய தண்ணீர் வந்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
கே.கே.நகர் சிவன் பூங்கா அருகே அம்மா குடிநீர் மையம் உள்ளது. இதன்மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தலா 20 லிட்டர் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக இங்கு சிலருக்கு மட்டுமே குடிநீர் கிடைக்கிறது.
இதனால் குடிநீர் மையம் வெறிச்சோடி கிடக்கிறது.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:–
குறைவான தண்ணீர்
அம்மா குடிநீர் மையம் மூலம் தினமும் காலையும், மாலையும் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக நீர் ஏற்றும் நிலையத்தில் இருந்து வரும் தண்ணீர் மிகக்குறைவாக தான் வருகிறது. அதுவும் 2 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது.
அதன் காரணமாக லாரியில் இருந்து கொண்டு வரப்பட்டு தண்ணீர் ஊற்றப்படுகிறது. பல லாரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தால் தான், அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும். ஆனால் ஒரு லாரி தண்ணீர் மட்டுமே ஊற்றப்படுகிறது. அந்த தண்ணீரும் சரியாக சுத்திகரிக்கப்படுவது இல்லை. அதைத்தான் சிலருக்கு வழங்குகிறார்கள். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story