ஆக்கூர் கிராமத்தில் மூடப்பட்ட வங்கியை மீண்டும் திறக்கக்கோரி மகளிர் சுயஉதவிகுழுவினர் ஆர்ப்பாட்டம்


ஆக்கூர் கிராமத்தில் மூடப்பட்ட வங்கியை மீண்டும் திறக்கக்கோரி மகளிர் சுயஉதவிகுழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 March 2017 4:30 AM IST (Updated: 19 March 2017 8:46 PM IST)
t-max-icont-min-icon

ஆக்கூர் கிராமத்தில் மூடப்பட்ட வங்கியை மீண்டும் திறக்கக்கோரி மகளிர் சுயஉதவிகுழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூடப்பட்ட வங்கி வெம்பாக்கத்தை அடுத்த ஆக்கூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் வசித்து வருகின்றனர். இங்கு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள

வெம்பாக்கம்,

மூடப்பட்ட வங்கி

வெம்பாக்கத்தை அடுத்த ஆக்கூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் வசித்து வருகின்றனர். இங்கு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, ஆரம்பசுகாதார நிலையம், தபால் நிலையம், மின்வாரிய அலுவலகம், கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு கடை போன்றவை உள்ளன. மேலும் இக்கிராமத்தின் அருகே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் சிப்காட் உள்ளது.

இதனால் ஆக்கூர் கிராமத்தை சுற்றியுள்ள குண்ணவாக்கம், மகாஜனப்பாக்கம், கூழமந்தல், உக்கல், இளநீர்குன்றம், மடிப்பாக்கம், நேத்தபாக்கம், காரணை, பாண்டியம்பாக்கம் உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு மையப் பகுதியாக ஆக்கூர் விளங்குகிறது. ஆக்கூரில் செயல்பட்டு வந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை ஏராளமான கிராமமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

நிர்வாக பிரச்சினை காரணமாக இந்த வங்கி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மூடப்பட்டது.

இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள், முதியோர் உதவித்தொகை பெறுவோர், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் செய்யாறு, காஞ்சீபுரம், மாமண்டூர், வெம்பாக்கம், வந்தவாசி ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஆர்ப்பாட்டம்

எனவே ஆக்கூர் கிராமத்தில் மூடப்பட்ட வங்கியை மீண்டும் திறக்கக்கோரி ஆக்கூர் கிராமத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர், பொதுமக்கள் நேற்று ஆக்கூர் கிராமம் எம்.ஜி.ஆர். சிலை அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வேம்பன் தலைமை தாங்கினார். ஆக்கூர் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் ராஜவேலு, ஊராட்சிமன்ற முன்னாள் உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தலைவி கெஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆக்கூர் கிராமத்தில் மூடப்பட்ட வங்கியை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம், வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆக்கூர் கிராமத்தில் மூடப்பட்ட வங்கியை மீண்டும் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என மகளிர் சுய உதவிக்குழுவினர் தெரிவித்தனர்.


Next Story