கிருஷ்ணகிரியில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் சிறுவர் பூங்கா போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்


கிருஷ்ணகிரியில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் சிறுவர் பூங்கா போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 19 March 2017 10:21 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமை தாங்கி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ஆயுதப்படை வாகன பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story