பம்பரம் கடைக்குள் விழுந்ததில் தகராறு: வாலிபர் கத்தியால் குத்திக்கொலை பொதுமக்கள் தாக்கியதில் கோழி இறைச்சிக்கடை தொழிலாளி படுகாயம்


பம்பரம் கடைக்குள் விழுந்ததில் தகராறு: வாலிபர் கத்தியால் குத்திக்கொலை பொதுமக்கள் தாக்கியதில் கோழி இறைச்சிக்கடை தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 20 March 2017 4:00 AM IST (Updated: 19 March 2017 10:29 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே பம்பரம் கடைக்குள் விழுந்ததில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை

பள்ளிபாளையம்,

பம்பரம் கடைக்குள் விழுந்ததில் தகராறு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த கொக்கராயன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவரது மகன் சதாம் (வயது21). இதே பகுதியில் கோழி இறைச்சி கடை ஒன்று உள்ளது. இங்கு பள்ளிபாளையத்தை அடுத்த வெப்படை அருகே உள்ள ஈக்காட்டூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன்(28) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

நேற்று காலை நண்பர்கள் சிலருடன் சதாம் பம்பரம் விளையாடினார். அப்போது பம்பரம் கோழி இறைச்சி கடைக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதை ஜெகநாதன் தட்டிக் கேட்டார். இதனால் ஜெகநாதனுக்கும், சதாமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கத்தியால் குத்திக்கொலை

இந்த நிலையில் நேற்று மாலை கொக்கராயன் பேட்டை குடிநீர் தொட்டி அருகே சதாம் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெகநாதன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதாமின் கழுத்தில் குத்தினார். இதில் சதாம் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஜெகநாதனை தாக்கினர். இதில் காயமடைந்த ஜெகநாதன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொலைகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கொக்கராயன் பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story