ரெயில்வே மேம்பால பணியின் போது இரும்பு கர்டர் சாய்ந்து தொழிலாளி கால் துண்டிப்பு; மற்றொருவர் காயம்


ரெயில்வே மேம்பால பணியின் போது  இரும்பு கர்டர் சாய்ந்து தொழிலாளி கால் துண்டிப்பு; மற்றொருவர் காயம்
x
தினத்தந்தி 20 March 2017 5:00 AM IST (Updated: 19 March 2017 10:39 PM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் ரெயில்வே மேம்பால பணியின் போது இரும்பு கர்டர் சாய்ந்ததில் தொழிலாளியின் கால் துண்டானது.

சோழவந்தான்,

ரெயில்வே மேம்பால பணி

மதுரையை அடுத்த சோழவந்தானில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் சுமார் 45 மீட்டர் நீளம் 60 டன் எடை கொண்ட 5 கர்டர்கள் இணைக்கும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது. அதில் 2 கர்டர்கள் பாலத்தில் பொருத்தப்பட்டன.

நேற்று காலை மற்ற கர்டர்களை பாலத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. அதில் அஜித், பாரதி, கோபால் ஆகியோர் ராட்சத கிரேன் மூலம் ஒரு கர்டரை தூக்குவதற்காக இரும்பு ரோப்பை பொருத்திக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரத விதமாக திடீரென கர்டர் கீழே சாய்ந்து விழுந்தது. அதில் அஜித் உள்பட 3 பேர் சிக்கிக் கொண்டனர்.

கால் துண்டிப்பு

இதைப்பார்த்த அங்கு வேலை செய்து கொண்டிருந்த மற்ற பணியாளர்கள் ஓடிச் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அதில் கடலூர் மாவட்டம் டி.மடப்புரத்தை சேர்ந்த அர்ஜூனன் மகன் அஜித் (வயது 26) என்பவருக்கு இடது கால் துண்டானது. மேலும் காட்டு மன்னார்குடியை சேர்ந்த கண்ணதாசன் மகன் பாரதி (25) என்பவருக்கு வலது கால் முறிந்தது.

அதிர்ஷ்டவசமாக கோபால் காயமின்றி தப்பினார். கயாயமடைந்த 2 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் ரெயில்வே மேம்பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Next Story