சங்கரன்கோவிலில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

நெல்லை,
நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சங்கரன்கோவில் தேரடி திடலில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசும் போது, தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அதிநவீன எல்.இ.டி. வாகனத்தின் மூலம் கிராம பகுதியில் வீடியோ படக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. புதிய திட்டங்கள் பற்றிய புகைப்படங்களும் வாகனத்தில் இடம் பெற்றுள்ளன. வள்ளியூர், அம்பை, தென்காசி ஆகிய இடங்களிலும் சாதனை விளக்க புகைப்பட காண்காட்சி நடத்தப்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சங்கரன்கோவில் நகரசபை ஆணையாளர் ராஜேந்திரன், தாசில்தார் சாம்பமூர்த்தி, நகரசபை பொறியாளர் முகைதீன் அப்துல்காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story