அடிப்படை எழுத்தறிவு தேர்வு மாவட்டத்தில் 13,314 பேர் எழுதினார்கள்


அடிப்படை எழுத்தறிவு தேர்வு மாவட்டத்தில் 13,314 பேர் எழுதினார்கள்
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 19 March 2017 11:54 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு தேர்வை 13,314 பேர் எழுதினார்கள்.

விழுப்புரம்,

அடிப்படை எழுத்தறிவு தேர்வு

மத்திய அரசின் கற்கும் பாரதம் வயது வந்தோர் கல்விதிட்டத்தின் படி விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2010–ம் ஆண்டு கணக்குப்படி மொத்தம் 5 லட்சத்து 90 ஆயிரத்து 91 பேர் அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களாக இருந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடத்தப்பட்ட அடிப்படை எழுத்தறிவு தேர்வின் மூலம் 5 லட்சத்து 76 ஆயிரத்து 777 பேர் தேர்ச்சி பெற்று அடிப்படை எழுத்தறிவை பெற்றனர். இதையடுத்து மீதமுள்ள 13,314 பேருக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1,104 மையங்களில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட கற்கும் பாரத திட்டத்தின் கீழ் தேசிய எழுத்தறிவு முனைப்பு ஆணையமும், தேசிய திறந்தவெளி பள்ளியும் இணைந்து நடத்திய இந்த தேர்வில் 13,314 பேரும் கலந்து கொண்டு எழுதினார்கள்.

ஆய்வு

இதில் விழுப்புரம் அருகே கெடார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மையத்தில் நடந்த தேர்வை மத்திய அரசின் மனிதவளமேம்பாட்டு கூடுதல் இயக்குனர் ராமகிருஷ்ணசுரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குனர் முத்துபழனிசாமி, மாநில கருவூல மைய இயக்குனர் பாலாஜி, விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ், திட்ட அலுவலர் ஒளி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சாதிக்அலி, வித்யா, டைடல் உள்பட பலர் உடன் இருந்தனர். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பெற்றவர்கள் என்கிற சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.


Next Story