ராஜீவ்காந்தி அரசு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ராமநகருக்கு மாற்றம் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


ராஜீவ்காந்தி அரசு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ராமநகருக்கு மாற்றம் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 20 March 2017 2:00 AM IST (Updated: 20 March 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி அரசு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ராமநகருக்கு மாற்றப்படுவதாக மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

ராஜீவ்காந்தி அரசு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ராமநகருக்கு மாற்றப்படுவதாக மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

எந்த தொந்தரவும் இல்லை

பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை ராமநகருக்கு மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் படிப்படியாக மாற்றப்படும். இந்த பணியை கவர்னர் எதிர்க்கவில்லை. கவர்னர் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு இடையே நடைபெறும் கடித விவரங்களை வெளியிட்டு குழப்பத்தை உண்டாக்க முயற்சி செய்கிறார்கள்.

நானும், மருத்துவ கல்வித்துறை மந்திரியும் கவர்னரை நேரில் சந்தித்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ராமநகருக்கு மாற்றப்படுகிறது என்பது குறித்த விவரங்களை தெரிவித்து உள்ளோம். அவர் இதை ஏற்றுக்கொண்டார். சட்ட ரீதியாக எந்த தொந்தரவும் இல்லை. மாணவர்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் பல்கலைக்கழகத்தை மாற்றுங்கள் என்று கவர்னர் எங்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

அரசின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பு

இந்த பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளில் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. 25 ஏக்கர் நிலத்திற்கு நிவாரணம் வழங்குவதில் சில பிரச்சினைகள் உள்ளன. கர்நாடக அரசு அந்த நிலத்திற்கு தற்போதைய சந்தை விலையை வழங்க முடிவு செய்துள்ளது.

புதிய வளாகத்தில் அமைக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு ரூ.1,000 கோடி செலவாகும். அங்கு மருத்துவமனையும் அமைக்கப்படுகிறது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story