ஈரோட்டில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 March 2017 3:45 AM IST (Updated: 20 March 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,

காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும். ரே‌ஷன் பொருட்களை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க நகரத்தலைவர் ஏ.அம்மணியம்மாள் தலைமை தாங்கினார். பொருளாளர் எல்.சுமதி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பி.எஸ்.பிரசன்னா, செயலாளர் ஆர்.கோமதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் பெண்கள் மாசுப்பட்ட குடிநீர் பாட்டிலை கையில் ஏந்தியபடி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் சீரங்காயி, சித்ரா மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் கே.கொங்குநிதி நன்றி கூறினார்.


Next Story