முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி கும்பகோணத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேலத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் ஆராய்ச்சி கல்வி பயின்று வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவருடைய மரணத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் கும்பகோணத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மலர் அஞ்சலி
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சைமன், பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக முத்துகிருஷ்ணன் உருவபடத்துக்கு மாணவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

Next Story