நில அளவையர்கள் அளவீடு செய்த பாசன வாய்க்கால்களை ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு
நில அளவையர்கள் அளவீடு செய்த பாசன வாய்க்கால்களை ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலை ஆய்வு செய்தார்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ள குளங்கள் மற்றும் பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை பராமரிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வீணாக்கப்படுவதாகவும் கும்பகோணத்தை சோ்ந்த யானை ராஜேந்திரன் என்பவா் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கும்பகோணத்தில் உள்ள பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலையை நியமித்து, ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலை, கும்பகோணத்தில் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்.
350 ஆக்கிரமிப்புகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர் ஆய்வு செய்தபோது, 350 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து நில அளவையர்கள் பாசன வாய்க்கால்களின் நீளம், அகலம் கும்பகோணம் நகர வரைபடத்தில் உள்ளபடி சரியாக உள்ளதா? என்பது பற்றி கண்டறிவதற்காக அளவீடு பணியை மேற்கொண்டனர். இவ்வாறு அளவீடு செய்யப்பட்ட வாய்க்கால்களில் நில அளவையர்கள் எல்லை கற்களை நட்டனர்.
இந்த நிலையில் நில அளவையர்கள் அளவீடு செய்த பாசன வாய்க்கால்களை, ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலை நேற்று ஆய்வு செய்தார். அப்போது காவிரி, அரசலாறு ஆகிய ஆறுகளில் இருந்து பிரிந்து செல்லும் பாசன வாய்க்கால்கள், குளங்களின் அளவுகள் வரைபடத்தில் உள்ளபடி சரிபார்க்கப்பட்டன. ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ஆனந்தன், நில அளவைத்துறை உதவி இயக்குனா் ராஜ்குமாா், நகரமைப்பு அலுவலா் பாஸ்கரன், அறநிலையத்துறை உதவி ஆணையா் ஞானசேகரன், பொது நல வழக்கு தொடா்ந்த யானை ராஜேந்திரன், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் இயக்க தலைவா் விமலநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்வு குறித்து யானை ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிகாரிகள் உறுதி
கும்பகோணம் உள்ளூா் வாய்க்காலில் பாதி சாலையாக மாறிவிட்டது. சில இடங்களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வாய்க்கால் இருந்த சுவடு தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசன வாய்க்கால்களை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளை வலியுறுத்தி இருக்கிறோம். ஆய்வு பணி முடிவடைந்ததும் குளம், பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story