தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்


தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 March 2017 4:00 AM IST (Updated: 20 March 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

தற்காலிக பணியாளயர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என திருவாரூரில் நடந்த பொதுப்பணித்துறை தொழில்நுட்ப களப்பணியாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

திருவாரூர்,

திருவாரூரில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை தொழில்நுட்ப களப்பணியாளர் சங்க திருச்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் வீரச்செல்வன், பொருளாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல துணைச்செயலாளர்கள் பரமசிவம், சிங்காரவேலு, ராஜேஷ், மண்டல துணைத்தலைவர்கள் ராஜ்குமார், ஜெயக்குமார், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

10 ஆண்டுகளுக்கு மேலாக திருச்சி மண்டலத்தில் உள்ள 431 பேர் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 400 பேர் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொதுக் குழு உறுப்பினர் சுரேஷ் நன்றி கூறினார். 

Next Story