தார்ச்சாலை இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு
கிருஷ்ணராயபுரம் அருகே தார்ச்சாலை இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணராயபுரம்,
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமணம்பட்டி- பூவம்பாடி வரையிலான 4 கிலோ மீட்டர் தார்ச்சாலையும், சேங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பூவம்பாடி- சின்னசேங்கல் வரை யிலான 1 கிலோ மீட்டர் தார்ச்சாலையும் சேர்த்து மொத்தம் 5 கிலோ மீட்டர் வரை உள்ள இந்த தார்ச்சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. சாலை போடப்பட்டதோடு சரி அதன் பிறகு பராமரிக்கப்படவே இல்லை. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக தார்ச்சாலை மிகவும் மோசமாக உள்ளது.
பயன்படுத்த முடியாத நிலை
இந்த தார்ச்சாலையின் வழியாக கரூரில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள், தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் சாலை வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும்போது இருட்டில் குண்டும், குழியில் விட்டு கீழே விழுந்து எழுந்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டால் சாலைகளில் உள்ள குழிகளில் தண்ணீர் நிரம்பி சாலை எது, குழி எது என தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. நாள்தோறும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வரும் இந்த தார்ச்சாலை இன்று பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி
இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கடந்த 2014-ம் ஆண்டு தார்ச்சாலையை காணவில்லை, கண்டுப்பிடித்து தருவோருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு என பரபரப்பு சுவரொட்டி அடித்து ஒட்டினர். இதையடுத்து இந்த தார்ச்சாலையை அப்போதைய கலெக்டர் ஜெயந்தி நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து சேங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பூவம்பாடி-சின்னசேங்கல் வரையிலான ஒரு கிலோ மீட்டர் தார்ச்சாலை மட்டும் புதிதாக அமைக்கப்பட்டது. ஆனால் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட 4 கிலோ மீட்டர் வரையிலான தார்ச்சாலையை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டனர். தார்ச்சாலை அமைத்து தருவார்கள் என பொறுத்து, பொறுத்து பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தற்போது அடுத்த கட்டமாக தார்ச்சாலை இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி அடித்து பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story