பூலம்பாடியில் ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்
பூலம்பாடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.
அரும்பாவூர்,
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலம்பாடியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி மேல சீனிவாசபுரத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி, சேலம், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 350-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
15 பேர் காயம்
காளைகள் முட்டியதில் பெரியம்மாபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 35), கஜேந்திரன் (29), கோவிந்தன் (46), சேலம் மாவட்டம் கடம்பூரை சேர்ந்த ராஜமாணிக்கம் (21), ரகமத்துல்லா (22), கலைநாதன் (22), வானவராயன்(25), நாமக்கல் மாவட்டம் கூட்டுக்குழி காடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை (35), சந்திரசேகர் (32), கோனேரி பட்டியை சேர்ந்த அருண் (21), ஜான் (27), உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த திவாகர் (22) உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பரிசு பொருட்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு விழா குழுவினரால் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், சில்வர் குடம், குத்துவிளக்கு, மின்விசிறி, வேட்டி, ரூ.5 ஆயிரம் வரையிலான பணமுடிப்பு போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியை சேலம், அரும்பாவூர், மேட்டூர், தொண்டமாந்துறை, வேப்பந்தட்டை, அன்னமங்கலம், பெரம்பலூர், அரியலூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழு வினர் மற்றும் பூலம்பாடி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story