மினிடெம்போ கதவை திடீரென திறந்ததால் விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி


மினிடெம்போ கதவை திடீரென திறந்ததால் விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி
x
தினத்தந்தி 20 March 2017 3:45 AM IST (Updated: 20 March 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

மினிடெம்போ கதவை திடீரென திறந்ததால் விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி

அழகியமண்டபம்,

திங்கள்சந்தை அருகே தலக்குளம் வாத்தியார்விளையை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 52), டெம்போ டிரைவர். இவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக திங்கள்சந்தைக்கு சென்றார். பிறகு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி திரும்பி கொண்டிருந்தார்.

தலக்குளம் புதுவிளை பகுதியில் சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த மினி டெம்போவை டிரைவர் நிறுத்தி விட்டு திடீரென கதவை திறந்தார். அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், மினி டெம்போவின் கதவில் மோதி சுரேந்திரன் கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு தலக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் சுரேந்திரன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story