விளையாட்டு வீரர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ரவிகுமார் தகவல்


விளையாட்டு வீரர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ரவிகுமார் தகவல்
x
தினத்தந்தி 20 March 2017 2:21 AM IST (Updated: 20 March 2017 2:21 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த விளையாட்டு வீரர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடி,

விளையாட்டு துறையில் தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுனர் மற்றும் விளையாட்டு தொடர்புடையவர்களுக்கு இந்திய அரசு ஆண்டு தோறும் பல்வேறு விருதுகள் வழங்கி, அவர்களை கவுரவப்படுத்தி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருது, ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது, துரோணாச்சார்யா விருது மற்றும் ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் விருதுகளை பெற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தகுதியான விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்

இந்த விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் அனைத்தும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான   ஷ்ஷ்ஷ்.sபீணீt.tஸீ.ரீஷீஸ்.வீஸீ   –ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்பும் போது, சம்பந்தப்பட்ட விருதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116–ஏ, ஈ.வே.ரா பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா சென்னை என்ற முகவரியில் அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் 15–ந் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு 044–28364322 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.


Next Story