தூத்துக்குடியில் தென்மண்டல அளவிலான கராத்தே போட்டி


தூத்துக்குடியில் தென்மண்டல அளவிலான கராத்தே போட்டி
x
தினத்தந்தி 20 March 2017 4:15 AM IST (Updated: 20 March 2017 2:21 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தென்மண்டல அளவிலான கராத்தே போட்டி நேற்று நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட வேர்ல்டு கோஜூரியூ கராத்தே பள்ளி சார்பில் தென்மண்டல அளவிலான பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கான கராத்தே போட்டிகள் நேற்று தூத்துக்குடி மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. போட்டிக்கு மீன்வள வாரிய முன்னாள் தலைவர் அமிர்த கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். போட்டி நடுவராக கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் அஜித்பிரகாஷ் பணியாற்றினார்.

பரிசுகள்

இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கட்டா எனப்படும் தனிநபர் போட்டியும், குமிட் எனப்படும் 2 பேர் சண்டையிடும் போட்டியும் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முடிவில் நெல்லை மாவட்ட கராத்தே பள்ளி செயலாளர் கவுரிசங்கர் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கராத்தே சங்க தலைவரும், கோஜூரியூ பள்ளி செயலாளருமான சுரேஷ்குமார் செய்து இருந்தார்.


Next Story