ஓடிக்கொண்டிருந்த காரின் அச்சு முறிந்தது; தடுப்புச்சுவரில் மோதி 6 பேர் படுகாயம்
ஓடிக்கொண்டிருந்த காரின் அச்சு திடீரென முறிந்ததால் அந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் 1½ வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியது.
எட்டயபுரம்,
கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். அவருடைய மகன் கோபால்சாமி (வயது 32). அவருடைய மனைவி பூவிழி (25). இவர்களுடைய 1½ வயது குழந்தை தீக்சனா.
குழந்தை தீக்சனாவுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக கோபால்சாமி குடும்பத்தினரும், உறவினர்களும் நேற்று முன்தினம் கோவையில் இருந்து ஒரு காரில் புறப்பட்டு, திருச்செந்தூருக்கு வந்தனர்.
நேற்று காலையில் திருச்செந்தூர் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்திவிட்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் 12 மணி அளவில் காரில் கோவைக்கு புறப்பட்டனர். காரை காளிமுத்து (41) என்பவர் ஓட்டினார்.
6 பேர் படுகாயம்
எட்டயபுரம் பகுதியில் நான்கு வழிச்சாலையில் கார் சென்றது. ஓடிக்கொண்டிருந்த காரின் முன்பக்க அச்சு திடீரென முறிந்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடியது. சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதி, அதில் ஏறி நின்றது.
இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த கோபால்சாமி, பூவிழி, கார் டிரைவர் காளிமுத்து, உறவினர்கள் பழனிச்சாமி, பழனியம்மாள், ரெங்கசாமி ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் குழந்தை தீக்சனா அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக 6 பேரும் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story