தவளக்குப்பத்தில் கடத்தப்பட்ட மாணவி மீட்பு; கார் டிரைவர் கைது


தவளக்குப்பத்தில் கடத்தப்பட்ட மாணவி மீட்பு; கார் டிரைவர் கைது
x
தினத்தந்தி 20 March 2017 3:39 AM IST (Updated: 20 March 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

மாணவியை போலீசார் சிதம்பரம் அருகே ஒரு கிராமத்தில் மீட்டனர்.இது சம்பவம் தொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி

புதுவை மாநிலம் தவளக்குப்பம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவி சரளா (பெயர்மாற்றப்பட்டு உள்ளது). கடந்த 15–ந்தேதி பள்ளிக்கூடம் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பள்ளிக்கூடம் சென்ற தனது மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் உறவினர் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். பின்னர் இது குறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.

இது தொடர்பாக தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போது தவளக்குப்பம் சடாநகர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் பாலசுப்பிரமணியம்(வயது20) என்பவர் அந்த மாணவியை காரில் கடத்தி சென்றதாக தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

போலீசார் மீட்டனர்

நேற்று காலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள கிராமத்தில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அந்த மாணவியை போலீசார் மீட்டனர்.பின்னர் கார் டிரைவர் பாலசுப்பிரமணியனை கைது செய்து புதுவை நீதிபதி தயாளன் முன்பு ஆஜர் படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


Next Story