மோட்டார் சைக்கிள்–லாரி நேருக்கு நேர் மோதல்: 9–ம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள்–லாரி நேருக்கு நேர் மோதல்: 9–ம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 21 March 2017 3:45 AM IST (Updated: 21 March 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள், லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9–ம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த அத்திமனம் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி(வயது 25). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் குமரன்(14). இவர், அங்குள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார்.

நேதாஜி, குமரன் இருவரும் மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் சுற்றுலா சென்றனர். பின்னர் வீடு திரும்பி வந்தனர். செங்கல்பட்டு அடுத்த புல்லேரிமேடு அருகே வந்த போது எதிரே வந்த லாரியும், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

2 பேர் பலி

இதில் படுகாயம் அடைந்த மாணவர் குமரன், நேதாஜி இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

மதுராந்தகம் அடுத்த பழையனூர் சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகன் பிரேம்குமார்(24). இவர், தனது மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிகுளத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

திருக்கழுக்குன்றம் அடுத்த ஈகை அருகே சென்றபோது முன்னால் சென்ற அரசு பஸ், ஈகை பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது பஸ்சை பின்தொடர்ந்து வேகமாக வந்த பிரேம்குமார், பஸ்சின் பின்பகுதியில் மோதினார்.

இதில் படுகாயம் அடைந்த பிரேம்குமார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story