ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர்,
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் வையாபுரி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆப்ரேட்டர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் மாதம் ரூ.3 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய மாதம் ரூ.300 வழங்க வேண்டும். 3 வருடம் பணி முடித்த துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story