கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2017 4:15 AM IST (Updated: 21 March 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதைதொடர்ந்து நேற்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜோதிமணி, மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் களுக்கு சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட அதிக பணிச்சுமை உள்ளது. இதனால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மக்கள் பணியாற்ற முடியவில்லை. எனவே பணிச்சுமையினை குறைத்து மக்கள் பணியாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணிகள் பாதிப்பு

நாகை மாவட்டத்தில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். தகுதியான அனைவருக்கும் உடனே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் வேலை நிறுத்தத்தால் நாகை மாவட்டத்தில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story