துப்புரவு தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
துப்புரவு தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கான குறைந்த பட்ச ஊதியக்குழு பரிந்துரையை வெளியிட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதிய நிலுவைத்தொகையை உடன் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த துப்பரவு தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன.
இதில் சங்க நிர்வாகிகள் பழனிவேல், கலியமூர்த்தி, ஞானசேகரன், லோகநாயகி, காரல்மார்க்ஸ், ஆறுமுகம், முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story