டிப்ளமோ என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை மதுகுடித்ததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு
அகஸ்தீஸ்வரம் அருகே மதுகுடித்ததை பெற்றோர் கண்டித்ததால் டிப்ளமோ என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
தென்தாமரைகுளம்,
அகஸ்தீஸ்வரம் அருகே பொன்னார்விளையை சேர்ந்தவர் ராஜமார்த்தாண்டன். இவருடைய மகன் பச்சைமால் (வயது 24). டிப்ளமோ என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். வந்த இடத்தில் தினமும் மதுகுடித்து விட்டு பச்சைமால் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர் மது குடிப்பதை நிறுத்தவில்லை.
நேற்றுமுன்தினம் இரவு குடித்து விட்டு வந்த பச்சைமாலுக்கும், பெற்றோருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு வெளியே சென்ற அவர், தென்னந்தோப்பில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
தற்கொலை
அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் தவசிலிங்கம், ஜெயலட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மதுகுடித்ததை பெற்றோர் கண்டித்ததால் டிப்ளமோ என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story