ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டம்

நாகர்கோவில்,
அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியதாரர்களுக்கு உரிய பணபலன் நிலுவைத்தொகைகளை உடனே வழங்க வேண்டும், ஓய்வூதியம் மாதந்தோறும் 1–ந் தேதி உத்தரவாதமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், கடந்த பிப்ரவரி மாத ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படாததை கண்டித்தும் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக்கழக மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 5–வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர். அதில் பெரும்பாலானோர் கண்களில் கருப்புத்துணி கட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்க தலைவர் குட்டப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரராஜ், மாநில துணைத்தலைவர் பால்ராஜ், பொருளாளர் செல்வராஜா சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story