நடைபாதை அமைக்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர் கைது
குன்னூர் அருகே நடைபாதை அமைக்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே வெலிங்டன் நல்லப்பன்தெரு உள்ளது. கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் 2–வது வார்டுக்குட்பட்ட இப்பகுதியில் சிமெண்டு நடைபாதை அமைக்க வேண்டும் என்று அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 65) என்பவர் குன்னூர்–ஊட்டி சாலையில் உள்ள பாய்ஸ்கம்பெனி பஸ்நிறுத்தம் அருகே காலை 9.30 மணியளவில் திடீரென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெலிங்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முதியவரை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். இதனை ஏற்க மறுத்த அவர் உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை வெலிங்டன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பேச்சுவார்த்தை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போர்டு துணைத்தலைவர் பாரதியார், தி.மு.க.வை சேர்ந்த மணி மற்றும் கவுன்சிலர்கள் போலீஸ் நிலையம் சென்று அந்த முதியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆறுமுகம் கூறியதாவது:– பொதுமக்களின் நலன் கருதி மண்சாலையாக உள்ள நடைபாதையை சிமெண்டு நடைபாதையாக மாற்ற வேண்டும் என்று கண்டோன்மெண்ட் என்ஜினீயரிடம் வலியுறுத்தினேன். ஆனால் அவர் நடைபாதை அமைக்க தடையாக உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதிகளில் நடைபெறும் மக்கள் நல மேம்பாட்டு பணிகளை தொழில்நுட்ப ஆய்வு செய்ய வேண்டும். கண்டோன்மெண்ட் பகுதியில் நீண்டகால குத்தகையில் குடியிருந்து வரும் வாரிசுகளின் குடியிருப்பு பகுதிகளான பாபு கிராமம், ஆஸ்பத்திரி சேரி, வண்டிச்சோலை போன்ற பகுதிகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட 18 அம்ச கோரிக்களை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து கண்டோன்மெண்ட் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மாலை 2 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆறுமுகத்தை போலீசார் விடுதலை செய்தனர்.
நடைபாதை பிரச்சினையில் என்ஜினீயர் மீது எந்த தவறும் இல்லை, கண்டோன்மெண்ட் போர்டு தலைமை நிர்வாக அதிகாரி தகவல்
கண்டோன்மெண்ட் என்ஜினீயர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதியவர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தது குறித்து வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்டு தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஸ்வர்மா கூறியதாவது:– நல்லப்பன் தெருவில் ஆறுமுகம் என்பவர் நடைபாதையை அமைக்க கேட்டு உள்ள இடம் பி–2 பட்டா நிலமாகும். கண்டோன்மெண்ட் நிர்வாகம் சார்பில் பட்டா நிலங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் போது அந்த பகுதியில் உள்ள பட்டாதாரர்கள் தடையில்லா சான்று வழங்கினால் மட்டுமே வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும். ஆறுமுகம் கேட்டு உள்ள நிலப்பகுதியில் நடைபாதை அமைக்க பழனிச்சாமி என்பவர் ஆட்சேபணை தெரிவித்து வருகிறார். இதனால் நடைபாதை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் அப்பகுதியில் நடைபாதை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
நடைபாதை பிரச்சினை தொடர்பாக கண்டோன்மெண்ட் என்ஜினீயர் மீது எந்த தவறும் இல்லை. அவர் மீது தவறு இருந்தால் அதற்குண்டான ஆதாரத்தை கொடுத்தால் துறை ரீதியிலான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story